

ஈப்போ, மே.10: மலேசிய இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சு அனைத்துலக கராத்தே போட்டிக்கு 75 ஆயிரம் ரிங்கிட் நிதியுதவி வழங்கியதாக இப்போட்டியை இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சரை பிரதிநிதித்து இந்நிகழ்வை தொடக்கி வைத்தபோது ஈப்போ தீமோர் நாடாளுமன்ற உறுப்பினர் ஹாவாட் லீ கூறினார்.
அதே வேளையில் பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் வ.சிவகுமார் 50 ஆயிரம் ரிங்கிட் நிதியுதவி வழங்கியுள்ளார். அவருடன் இணைந்து கொன்வன்ஷன் கண்காட்சி தொடர்புடைய அரசுத்துறை சார்ந்த நிறுவனம் 40 ஆயிரம் ரிங்கிட் வழங்கி உதவியுள்ளதையும் அவர் குறிப்பிட்டார்.
இவ்வாண்டு ஈப்போ மாநகரில் நடைபெறும் இப்போட்டியில் சுமார் 1320 விளையாட்டாளர்கள் கலந்துக்கொள்கின்றனர். அவர்களுடன் அயல் நாட்டு விளையாட்டாளர்கள் சுமார் 280 பேர் கலந்துக்கொண்டது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்று அவர் தெரிவித்தார்.
இவர்கள் அனைவரின் வருகையால் ஈப்போ மிகவும் பிரசித்து பெற்ற சுற்றுலா தலமாக உருமாறியது. இந்த கராத்தே விளையாட்டாளர்களுடன் அவர்களது பெற்றோர்கள் மற்றும் குடும்பதாரும் வந்துள்ளனர். இதனால் நல்லதொரு பொருளாதார அபிவிருத்தியை நாம் காணமுடியும் என்று அவர் தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி, விளையாட்டாளர்களிடையே நட்புறவு மேலோங்கும். இது ஒரு அனைத்துலக நட்புறவாக உருமாற்றம் பெறுவதோடு இந்த விளையாட்டாளர்கள் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கு பெறும் பொது இந்த ஈப்போ மாநகரை நினைவுகூற முடியும் என்று அவர் கருத்துரைத்தார்.
தற்போது இப்போட்டிகளில் ஐரோப்பா மற்றும் தென் அமெரிக்கா நாடுகள் பங்கு பெறுவதில் ஆர்வம் காட்டி வருகினறனர். இந்நிலைப்பாடு மேலும் அதிகரிக்கப்பட வேண்டும்.குறிப்பாக, இம்முறை ரஷ்யா மற்றும் பிரேஜில் ஆகிய நாடுகளை அவர் சுட்டிக்காட்டினார்.
விளையாட்டுத்துறை வசதிகள் அனைத்துலக ரீதியில் ஈப்போ மாநகரில் சுக்மா 2018 ல் அமைக்கப்பட்டது. அதன் பயனாக இன்று இந்த அரங்கை பயன்படுத்த ஏதுவாக அமைகிறது. ஆகையால், விளையாட்டு வசதிகள் தொடர்ந்து பராமரிக்கப்படுவதால் நம் அனைவருக்கும் நன்மையே என்று அவர் மகிழ்ச்சியுடன் கூறினார்.
இந்நிகழ்வின் நிறைவுவிழாவில் காசோலைகள் வழங்கப்பட்டன. கராத்தே போட்டியில் கலந்துக்கொண்ட நாடுகளுக்கு நினைவுச் சின்னம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.