
பினாங்கு மே 15-
வட மலேசிய தமிழ் நிருபர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் செய்தியாளருக்கு பாராட்டு விழா இன்று 15/5/25 அன்று செபாராங் பிறை லைட் ஹோட்டல் தாங்கும் விடுதியில் சரியாக மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வுக்கு பினாங்கு மாநில பிறை சட்டமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ சுந்தாராஜு சோமு தலைமையில் மற்ற பிரமுகர்களின் முன்னியிலையில் நடைபெறுகிறது.
பினாங்கு மலேசிய குற்றத் தடுப்பு அறவாரியத்தின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ கா.புலேந்திரன், சமூக ஆர்வலர் சிங்கப்பூர் டாக்டர் சின்னையா, பிரதமர் துறையின் சிறப்பு அதிகாரி சண்முகம் மூக்கன், உலு சிலாங்கூர் கெஅடிலான் தொகுதி தலைவர் டாக்டர் சத்யா பிரகாஷ் நடராஜன் உட்பட பலரும் இதில் கலந்து கொள்கிறார்கள்.
உலகத்தின் இரு கண்களாக பார்க்கப்படும்
ஊடகவியாலருக்கு மரியாதை செய்யும் வேளையில் நாள் தோறும் நாட்டு மக்களுக்கு உலக நடப்புகளை கொண்டு
சேர்ருக்கும் தியாக உணர்வுக்கு பாராட்டும் விருந்து உபசரிப்பை அனுசரிப்பதேயாகும் என்று விழா ஏற்பாட்டுக் குழு தலைவர் செல்வம் சடையன் தெரிவித்தார்.

