
காளிதாஸ் சுப்ரமணியம்
கோலாலம்பூர் மே. 22-
நம் அனைவருக்கும் ஒற்றுமையாக இருந்து செயல்பட்டால் எதையும் சாதிக்க முடியும் என்று உலு சிலாங்கூர் தொகுதி கெஅடிலான் தலைவர் டாக்டர் சத்யா பிரகாஷ் நடராஜன் தெரிவித்தார்.
நம்மிடையே ஒற்றுமை இல்லாத காரணத்தால் எதையுமே சாதிக்க முடியவில்லை.
மற்ற இனங்களை போல் நாமும் ஒற்றுமையை கடைப்பிடித்தால் எதையும் சாதித்து காட்ட முடியும் என்று அவர் சொன்னார்.
நம்மிடையே பிரிவினை வேண்டாம். கருத்து வேறுபாடுகளை புறக்கணித்து சமுதாயம் என்ற அடிப்படையில் ஒற்றுமையாக வாழ்ந்து சாதித்து காட்டுவோம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

கெஅடிலான் கட்சியின் தேசிய உதவித் தலைவர் பதவிக்கு போட்டியிடும் டாக்டர் சத்யா பிரகாஷ் நடராஜன் அவர்களுக்கு கெஅடிலான் இந்தியர்கள் மகாத்தான் ஆதரவை வழங்கி வருவது மிகவும் பாராட்டுக்குரியது.
சிலாங்கூர் இந்திய நிர்வாக இயக்கத்தின் சார்பில் நேற்று லேக் கிளப்பில் நடைபெற்ற நிகழ்வில் உதவித் தலைவர், உச்சமன்றம், இளைஞர் மற்றும் மகளிர் அணிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக விழா மிகவும் விமர்சியாக நடைபெற்றது

