

கோலாலம்பூர் மே 22-
வரும் ஜூலை மாதம் 22 ஆம் தேதி சுங்கை பூலோ ஆர்ஆர்ஐ திடலில் சிலாங்கூர் – விலாயா மாநில தமிழ்ப்பள்ளிகள் இடையிலான 21 ஆம் ஆண்டு கால்பந்து போட்டி மிகப்பெரிய அளவில் நடைபெறுகிறது.
சிலாங்கூர் – விலாயா மாநில தமிழ்ப்பள்ளி தலைமை ஆசிரியர் மன்றம் மற்றும் சிலாங்கூர் காற்பந்து சங்கத்தின் ஆதரவில் இந்த போட்டி நடத்தப்படுகிறது என்று பெட்டாலிங் மாவட்ட கால்பந்து சங்கத்தின் தலைவர் பத்துமலை தெரிவித்தார்.
ஆண்கள் பிரிவில் வெற்றி பெறும் குழுவுக்கு நமச்சிவாயம் கிண்ணமும் பெண்கள் பிரிவில் வெற்றி பெறும் குழுவுக்கு ரவீந்திரன் கிண்ண மும் வழங்கப் படுகிறது.
இந்த போட்டியில் பங்கேற்கும் குழுக்கள் வரும் ஜூன் மாதம் 6 ஆம் தேதிக்குள் பதிந்து கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
போட்டிக்கான குலுக்கல் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
இந்த போட்டிக்கு மைலோ நிறுவனம் முழு ஆதரவு வழங்கி உள்ளது என்றார் அவர்.

