
கோலாலம்பூர், மே 26 – காஸாவில் அனைத்துலக மனிதாபிமானச்
சட்டங்கள் மதிக்கப்பட வேண்டும் என்பதோடு அவை பின்பற்றப்படவும்
வேண்டும் என்ற தனது நிலைப்பாட்டை ஆசியான் தெளிவாகவும்
உறுதியாகவும் வெளிப்படுத்தியது.
ஆசியான் தெளிவாக உள்ளது. காஸாவிலும் பாலஸ்தீனத்திலும்
மனிதாபிமான அம்சங்களும் அனைத்துலக சட்டங்களும் மதிக்கப்படுவதை
உறுதி செய்வதற்கு ஆசியான் தனது முழு ஆதரவை புலப்படுத்துகிறது
என்று பிலிப்பைன்ஸ் வெளியுறவுச் செயலாளர் என்ட்ரிக் ஏ மனாலோ
நேற்று ஊடகங்களிடம் கூறினார்.
நேற்று இங்குள்ள கோலாலம்பூர் அனைத்துலக மாநாட்டு மையத்தில்
நடைபெற்ற ஆசியான்-வளைகுடா ஒத்துழைப்பு மன்றத்தின் (ஜி.சி.சி.)
வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்திற்கு பிலிப்பைன்ஸ் தலைமை தாங்கிய
நிலையில் பாலஸ்தீனம் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
மனிதாபிமான உதவிகள் எந்த தங்கு தடையுமின்றி செல்வதை உறுதி
செய்யாவிடில் காஸாவில் மனிதாபிமான நெருக்கடி மேலும் அதிகரிக்கும்
என்று கிழக்கு அருகாமை பாலஸ்தீன அதிகளுக்கான ஐக்கிய நாடுகள்
சபையின் உதவி மற்றும் பணி நிறுவனம் எச்சரித்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் 2ஆம் தேதி முதல் இஸ்ரேல் விதித்து வரும்
கட்டுப்பாடுகள் காரணமாக 24 லட்சம் மக்கள் ஏறக்குறைய பஞ்சத்தால்
வாடும் நிலை ஏற்பட்டுள்ளதாக கட்டார் செய்தி நிறுவனம் தெரிவித்தது.
bernama

