தெலுக் இந்தான் நகர மன்றத்துடன் இணைந்து சகோதரர் தேவர் தொடர்பான பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டது!

தெலுக் இந்தான் மே 25-
ம இகா தேசிய உதவித் தலைவர் (Vice President) எனும் நிலையில், MIC கம்பம் தெர்சுன் கிளைத் தலைவர் சகோதரர் தேவர் அவர்களுக்கும் தெலுக் இன்தான் நகர மன்றத்துக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சனையை இன்று நேரில் சென்று நான் தீர்த்துவைத்தேன்.

முன்னதாக, சகோதரர் தேவர் நகர மன்றத்தின் முன்பகுதி கண்ணாடி கதவை உடைத்ததாக கூறப்பட்ட சம்பவம் காரணமாக, அவருக்கு நகர மன்றம் கடையை வாடகைக்கு கொடுக்க மறுத்தது.

நகர மன்ற யாங் டி பெர்துவான் (YDP) துவான் சைருல் அக்மல் பின் காசிம் அவர்களுடன் நடத்திய நேரடி கலந்துரையாடலில், நிலைமையை விளக்கி கடையை மீண்டும் சகோதரர் தேவருக்கு வாடகைக்கு வழங்க YDP உடன்பட்டார்.

மேலும், நகர மன்றம் வழங்கிய போலீஸ் புகாரையும் வாபஸ் பெற YDP-ஐ நான் கேட்டுக் கொண்டேன்.

இதில், அவர் நேரடியாக விசாரணை அதிகாரியுடன் (IO) பேசித் தீர்மானிக்க தயார் என தெரிவித்தார்.

இந்த சந்திப்பில் என்னுடன் MIC தெலுக் இந்தான் பகுதி தலைவர் திரு மனிகண்டன், துணைத் தலைவர் திரு செல்வராஜூ, மற்றும் MIC நியமனத்தை பெற்ற நகர மன்ற உறுப்பினர் திரு ஸ்ரீ முருகன் உடனிருந்தனர்.

இந்த வழக்கு முழுமையாக தீர்க்கப்பட்டது. MIC, மக்களின் நலனுக்காக உணர்வுடன் செயல்பட தொடர்ந்து உறுதியளிக்கிறது என்று டத்தோ முருகையா தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles