அமைச்சர் சிவகுமார் உட்பட ஜசெக இந்தியத் தலைவர்களை குறி வைத்து தாக்குதல் நடத்த உத்தரவு பிறப்பித்த குள்ளநரி யார்?

மனிதவள அமைச்சர் வி சிவகுமார் உட்பட
ஜசெக இந்தியத் தலைவர்களையும் மட்டம் தட்டும் வகையில் ஒரு இணையத்தளம் இரு தினங்களுக்கு முன் செய்தியை வெளியிட்டது.

பினாங்கு மாநிலத்தில் துணை தலைவர் பேராசிரியர் டாக்டர் பி இராமசாமி, சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ், நெகிரி செம்பிலான் மாநிலத்தில் ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெ. அருள்குமார் உட்பட அனைத்து ஜசெக இந்தியத் தலைவர்களை மிகவும் கேவலப்படுத்தும் வகையில் இந்த செய்தி அமைந்திருந்தது.

கட்டுரையாளருக்கு இந்த செய்தியை எழுதும்படி உத்தரவு பிறப்பித்த கருங்காலி யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த இணையத்தளம் தொடங்குவதற்கு ஜசெக இந்தியத் தலைவர்கள் நிதியுதவி கொடுத்து பேருதவி செய்தனர்.

ஆனால் நன்றிக் கெட்ட தனமாக இந்த இணையத் தளம் நன்றியை மறந்து ஜசெக இந்தியத் தலைவர்களை குறி வைத்து தாக்குதல் நடத்தியுள்ளதை ஜசெக தலைவர்கள் வன்மையாக கண்டித்துள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles