
ஊழலில் ஈடுபட்ட நெத்திலி மீன்களை பிடிப்பதை விட சூறா மீன்களுக்கு எம்ஏசிசி எனப்படும் ஊழல் தடுப்பு ஆணையம் வலை வீசும் படி பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஊழலில் ஈடுபடுவோருக்கு எதிராக ஊழல் தடுப்பு ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குறிப்பாக நெத்திலி மீன்களை பிடிப்பதை விட சூறா மீன்களை பிடியுங்கள் என்று ஊழல் தடுப்பு ஆணையத்தை அவர் கேட்டுக் கொண்டார்.
இதனிடையே இனபாகுபாடு இன்றி அனைத்து தரப்பினருக்கும் முன்னுரிமை கொடுக்கும் வேளையில் ஏழைகளாக இருக்கும் மலாய், இந்தியர்,பூர்வ குடிமக்களுக்கு உதவுவதில் அக்கறை செலுத்துவேன் என்று அவர் சொன்னார்.

