
பத்துகாஜா,ஜூன்01: பத்துகாஜா நாடாளுமன்றத்திற்கு உட்பட பூசிங் வட்டாரத்தில் கூடுதல் மற்றும் நிறைவான வசதிகளைக் கொண்ட பெரியதொரு தாய்செய் கிளினிக்கின் தேவை அவசியமாவதாக அதன் நாடாளுமன்ற உறுப்பினர் வ.சிவகுமார் குறிப்பிட்டார்.
இன்று காலை பூசிங் தாய்சேய் கிளினிக்கிற்கு வருகை புரிந்த சிவகுமார் கிளினிக்கின் தேவைகள் உட்பட அதன் பயன்பாடு,செயல்பாடு என அனைத்தையும் கேட்டறிந்ததோடு அனைத்து வசதிகளுடனான கிளினிக்கின் அவசியத்தையும் செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டார்.
ஆண்டுக்கு சுமார் 500 குழந்தைகள் இங்கு பிறப்பதாக குறிப்பிட்ட சிவகுமார் அதனை சமாளிப்பதில் இந்தச் சின்ன கிளினிக் பெரும் சவாலை எதிர்நோக்கும் என்றும் விவரித்தார்.
தற்போது கடை வீடொன்றில் செயல்பட்டு வரும் தாய்சேய் கிளினிக்கின் தேவை இவ்வட்டாரத்தில் பெரும் அளவில் அவசியமானதாக இருக்கும் சூழலில் சகல மருத்துவ வசதிகளையும் கொண்ட அல்லது தனித்துவமான மேம்படுத்தபட்ட நவீன வசதிகளையும் கொண்ட கிளினிக் இவ்வட்டாரத்தில் உருவாக தாம் தொடர்ந்து ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை முன்னெடுப்பேன் எனவும் அவர் மேலும் கூறினார்.
இவ்விவகாரம் குறித்து சுகாதார அமைச்சு உட்பட அது சார்ந்த இலாகாவுடன் கலந்து பேசுவேன் எனவும் இவ்விவகாரத்தை நாடாளுமன்றத்தின் தனது வாதத்தின் போது முன் வைக்கப்போவதாகவும் சிவகுமார் தெரிவித்தார்.
அதேவேளையில்,பத்துகாஜா நாடாளுமன்றத்தைப் பொருத்தமட்டில் மக்களின் தேவையே முதன்மை கோரிக்கை எனவும் அதனை இதுவரை நிறைவாகவே சிவகுமார் செய்திருப்பதாகவும் அவரோடு கிளினிக்கிற்கு வருகை புரிந்த அவரது சேவை மையப்பொறுப்பாளர்கள் கூறினார்கள்.

