தேசிய தரவு பாதுகாப்புச் சட்டம் மக்களுக்கானது -கோபிந்த் சிங் டியோ

இலக்கவியல்  அமைச்சு, இலக்கவியல்  தரவுப் பகிர்வுக்கான கொள்கையை விரைவில் வெளியிடும் என்று இலக்கவியல்  அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.

2025 ஆம் ஆண்டு தரவுப் பகிர்வு சட்டம் [சட்டம் 864] கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதி, அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்ததை அடுத்து இந்தக் கொள்கை வெளியிடப்படுகிறது.

தனி மனித தரவு என்பது இரகசியமாகவும், முறையாகவும் பாதுகாக்கப்பட வேண்டியது. இதனை கருத்தில் கொண்டு, மக்களின் தரவுகளை நிர்வகிக்க தேசிய தரவுப் பகிர்வு ஆணைய குழு அமைக்கப்பட்டது.

தனது தலைமையில் இயங்கும் இந்தக் குழுவில், நாட்டிலுள்ள முக்கிய அமைச்சுகளிலிருக்கும் உயர் அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர். ஆக அந்தந்த அமைச்சுகளின் தரவுகள் முறையாகவும், துல்லியமாகவும் இலகுவாகவும் கையாள இந்த தேசிய தரவு பகிர்வு ஆணைய குழு வழிகாட்டும். அதன் வழி தரவுப் பகிர்வுக்கான கொள்கையை விரைவில் வெளியிடப்படும் என கோபிந் சிங் டியோ கூறினார்.

தேசிய தரவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பகிரப்படும் தரவு செயல்பாடுகள் அந்ததந்த அமைச்சுக்கேற்ப இலகுவாகவும், பாதுகாப்பானாதாகவும், சட்டத்திட்குட்பட்டதாகவும், முறையானதாகவும் இருப்பதை உறுதிச் செய்ய தேசிய தரவு பகிர்வு ஆணைய குழு அமைக்கப்பட்டதாக இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ கூறினார்.

இலக்கவியல்  அமைச்சின் தலைமைச் செயலாளர் ஃபேபியன் பிகார், மற்றும் தேசிய தரவுப் பகிர்வு ஆணையத்தின் தலைவர் Ts. நிக் சல்பிஹா பிந்தி நிக் மாட், ஐசிடி தலைமை ஆலோசகர், மற்றும் தேசிய இலக்கவியல்  துறையின் தலைமை இயக்குநர், மற்றும் தேசிய தரவுப் பகிர்வு ஆணையத்தின் செயலாளர் ஆகியோர் முன்னிலையில், 2025 ஆம் ஆண்டுக்கான தேசிய தரவுப் பகிர்வு ஆணையக் கூட்டத்தின் தொடக்க உரையில் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ இவ்வாறு கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles