கிரிக்கில் நடந்த கோர விபத்தில்15 உப்சி பல்கலைக்கழக மாணவர்கள் மரணம்!

கிரிக், ஜூன் 9-
உப்சி மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் கவிழ்ந்த துயர சம்பவத்தில் 15 பேர் மரணமடைந்துள்ளனர்.

இந்த கோர விபத்து சம்பவம் நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பேரா தாசேக் பந்திங் அருகே உள்ள ஜாலான் ஜெலி – கிரிக் என்ற இடத்தில் இன்று ஒரு மணிக்கு இந்த துயர விபத்து நடந்ததுள்ளது.

உப்சி எனப்படும் சுல்தான் இட்ரிஸ் கல்வி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் பல்கலைக் கழகத்திற்குத் திரும்பிச் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது என்று கூறப்படுகிறது.

இதில் 15 மாணவர்கள் மரணமடைந்துள்ளனர். அதே வேளையில் ஏழு பேர் படுகாயமடைந்தனர்.

இந்த விபத்தில் 13 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இரண்டு மாணவர்கள் கிரிக் மருத்துவமனையில் உயிரிழந்தனர்.

அதிகாலை 1 மணியளவில் நடந்ததாக நம்பப்படும் இந்த விபத்தில் ஒரு காரும் சம்பந்தப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles