



கோலாலம்பூர் ஜூன் 7-
உலகில் வாழும் முஸ்லிம் பெருமக்கள் இன்று புனித ஹஜ் பெருநாளை மிகவும் விமரிசையாக கொண்டாடினர்
அந்த வகையில் கோலாலம்பூர் கம்போங் பண்டான் மதராசாவில் ஹஜ் பெருநாள் கொண்டாட்டத்தில் நூற்றுக்கணக்கான முஸ்லிம் பெருமக்கள் கலந்து சிறப்பித்தனர்.
காலையில் ஹஜ் பெருநாள் தொழுகைக்கு பிறகு ஆடுகள் குர்பானி கொடுக்கப்பட்டது.
பின்னர் ஏழை எளிய மக்களுக்கு குர்பானி கொடுக்கப்பட்ட ஆடுகள் பகிர்ந்து அளிக்கப்பட்டன.
கம்போங் பண்டான் மதராசாவின் இமாம் முகமட் சாலிஹ் மற்றும்
உஸ்தாத் ஹாபிள் எஸ்.முஹம்மது சலீம் மற்றும் மதரஸாவில் தலைவர் ஹாஜி முகமட் இக்பால் தலைமையிலான நிர்வாகத்தினர் முன்னிலையில் இவ்வாண்டு ஹஜ் பெருநாள் கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

