
கோலாலம்பூர் ஜூன் 9-
பேராக் மாநிலத்தில் கிரிக்கில் இன்று அதிகாலை காலை 1.10 மணிக்கு நிகழ்ந்த சோகம் மிகுந்த சாலை விபத்தில் யுனிவர்சிட்டி பெந்திடிகான் சுல்தான் இட்ரிஸ் (UPSI) இல் பயிலும் 15 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் வேதனையும் அளிக்கிறது என்று பிபிபி கட்சியின் தேசிய தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா தெரிவித்தார்.
இந்த கோர விபத்து குறித்த செய்தி கிடைத்ததும் எனது மனதை வேதனையடையச் செய்தது. இவ்விபத்து நாட்டை உலுக்கிய ஒரு பேரதிர்ச்சியான சம்பவமாகும்
கல்வி வழியாக தங்களது சிறப்பான எதிர்காலத்தை கட்டி எழுப்பும் முயற்சியில் இருந்த மாணவர்களை இழந்து வாடும் அவர்களின் குடும்பங்களுக்கும் இது ஒரு மோசமான பேரிழப்பாகும்.
உயிரிழந்த மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களையும் இரங்கலையும் பிபிபி கட்சியின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காயமடைந்த மாணவர்கள் விரைவில் முழுமையாக நலமடைய பிரார்த்திக்கிறேன்.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் மத்திய அரசு மற்றும் மாநில அரசு முழுமையான உதவிகளை வழங்க வேண்டும் என்று வலியுறுத்து கிறேன்.
இதுபோன்ற துயரமான சம்பவங்கள் இனியும் நடக்காமல் இருப்பதை அனைத்து தரப்பினரும் உறுதி செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
சமீப காலமாக பேருந்து சம்பந்தப்பட்ட அதிகமான சாலை விபத்துகள் நடந்து வருகின்றன. மாணவர்கள் மற்றும் பொதுமக்களை ஏற்றி செல்லும் பேருந்துகள் நல்ல நிலையில் இருக்கிறதா என்பதையும் போக்குவரத்து துறை, ஜேபிஜே, புஸ்பாக்கோம் உறுதி செய்ய வேண்டும்.
மேலும் டிரைவர்கள் எந்த மனநிலையில் இருக்கிறார்கள் என்பதையும் உறுதி செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

