ஆசியக் கிண்ணக் கால்பந்து போட்டியில் மலேசியா 4-0 என வியட்னாமை வீழ்த்தியது!

புக்கிட் ஜாலில், ஜூன் 11 – நேற்று நடைபெற்ற 2027 ஆசியக் கிண்ணக் கால்பந்து போட்டிக்கான F பிரிவு ஆட்டத்தில் மலேசியா 4-0 என வியட்னாமை வீழ்த்தியது.

உலகத் தர வரிசையில் 109-ஆவது இடத்திலிருக்கும் வியட்னாமுக்கு எதிராக கடந்த 11 ஆண்டுகளில் மலேசியா பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.

ஆட்டம் தொடங்கியதன் முதல் `Harimau Malaya` அதிரடி தாக்குதல்களை மேற்கொண்டது. இருப்பினும், முற்பாதி ஆட்டம் கோலின்றி சமநிலையிலேயே முடிந்தது.

பிற்பாதி தொடங்கியதும் 49-ஆவது நிமிடத்தில் Joao Vitor Figueiredo, Harimau Malaya-வின் முதல் கோலை புகுத்தி அரங்கை அதிரச் செய்தார்.

பின்னர் 59-ஆவது நிமிடத்தில் Holgado, 67-ஆவது நிமிடத்தில் Corbin-Ong மற்றும் 88-ஆவது நிமிடத்தில் Dion Cools மூலம் அடுத்தடுத்து 3 கோல்களை அடித்து தேசிய அணி வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் F பிரிவில் 6 புள்ளிகளுடன் மலேசியா முதலிடத்தில் உள்ளது. மேலும், 3 புள்ளிகளுடன் வியட்நாம் இரண்டாம் இடத்தை வகிக்கிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles