
கோலாலம்பூர் ஜூன் 14-
சிலாங்கூர் இந்தியர் நிர்வாக இயக்கம் (பேய்ஸ்)
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தோற்று விக்கப்பட்டது. இந்த இயக்கம் கடந்த ஆண்டுகளில் இந்திய சமுதாயத்திற்கு நிறைவான சேவைகளை வழங்கி உள்ளது.
சிலாங்கூர் இந்தியர் நிர்வாக இயக்கம் இனி நாடு தழுவிய அளவில் அறிமுகப்படுத்த முன்னெடுப்புகளை மேற்கொள்ளப் படும் என்று அதன் தலைவர் டாக்டர் சத்யா பிரகாஷ் நடராஜன் தெரிவித்தார்.

வளரும் தலைமுறை தாக்கு பிடிக்க வேண்டும் என்றால் உருப்படியான திட்டங்கள் தேவை. மேலும் இந்திய சமுதாயத்திற்கு என்று ஒரு வலுவான நிதி மற்றும் பொருளாதாரம் தேவை என்று உலுசிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளரான டாக்டர் சத்யா பிரகாஷ் நடராஜன் தெரிவித்தார்.
இந்திய சமுதாயத்திற்கான தேவைகளை அரசாங்கம் பூர்த்தி செய்தால் அடுத்த பொதுத் தேர்தலில் இந்தியர்களின் ஆதரவு கண்டிப்பாக நடப்பு அரசுக்கு கிடைக்கும் என்று அவர் சொன்னார்.

நேற்று பத்துகேவ்ஸ் ஷெங்கா மண்டபத்தில் மிகப்பெரிய அளவில் இந்த நிகழ்வில் நெகிரி செம்பிலான் மாநிலத்தின் முன்னாள் துணை சபாநாயகர் டத்தோ ரவி, பிரதமர் துறை அமைச்சின் சிறப்பு அதிகாரி சண்முகம் மூக்கன், மலாக்கா பிரசாத் குமார், பாங்கி பாலமுரளி, செபூத்தே அனிதா , கெடா மாநில முன்னாள் ஆட்சிக் குழு உறுப்பினர் ஆறுமுகம், உஷா நந்தினி உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.
டிரா மலேசிய அமைப்பின் தலைவர் டத்தோ சரவணன் சின்னப்பன் இந்த நிகழ்வில் சிறப்புரையாற்றினார்.

