சிலாங்கூர் மாநில துணை சபாநாயகர் தலைமையில் அம்பாங்கில் தமிழர் திருநாள் விழா!

அம்பாங் ஜூன் 15-
புக்கிட் அந்தாரா பங்சா சட்டமன்றத்துடன் இணைந்து அம்பாங் ஜெயா நகராண்மைக் கழக உறுப்பினர் நடேசன் வரதன் ஏற்பாட்டில் இன்று பண்டார் பாரு அம்பாங் சமூக மண்டபத்தில் தமிழர் திருநாள் மிகவும் விமரிசையாக நடைபெற்றது.

புக்கிட் அந்தாரா பங்சா சட்டமன்ற உறுப்பினர் மற்றும் சிலாங்கூர் மாநில துணை சபாநாயகர் முகமட் கமரி கமாரூடின் சிறப்பு வருகை தந்து குத்து விளக்கு ஏற்றி வைத்ததோடு உரி அடித்து தமிழர் திருநாள் விழாவை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.

புக்கிட் அந்தாரா பங்சா கிராமத் தலைவர் பானு சின்னசாமி உட்பட பலரும் இந்த விழாவில் கலந்து சிறப்பித்தனர்.

தமிழர் திருநாள் விழாவில் கலந்து கொண்ட பொது மக்கள் பாரம்பரிய விளையாட்டு போட்டிகளில் பங்கெடுத்தனர்.

பின்னர் அனைவருக்கும் சுவையான சைவ உணவு பரிமாறப்பட்டது

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles