எஸ்.பி.எம். தேர்வில் அனைத்து பாடங்களில்” ஏ” பெற்ற 40 மாணவர்களுக்கு தலா 500 ரிங்கிட் வழங்கப்பட்டது!

பத்துகாஜா, ஜுன்.17: இவ்வாண்டு வெளியான எஸ்.பி.எம் தேர்வு முடிவுகளில் அதிகமான மாணவர்கள் சிறப்பு தேர்ச்சி பெற்றுள்ளனர். அதன் அடிப்படையில் பத்துகாஜா நாடாளுமன்ற தொகுதியில் செயல்படும் 8 இடைநிலை பள்ளிகளிலிருந்து 40 மாணவர்கள் அனைத்து பாடங்களில் “ஏ” பெற்றனர் என்று பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் வ.சிவகுமார் கூறினார்.

இந்த தேர்வில் சிறப்பு தேர்ச்சி பெற்ற 40 மாணவர்களுக்கு பணமுடிப்பு வழங்கப்பட்டது. குறிப்பாக, ஒவ்வொரு மாணவருக்கும் 500 ரிங்கிட் ரொக்கத்தை பத்துகாஜா தொகுதியின் மக்கள் சேவை மையத்தின் உதவிகள் வழங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இத்தகைய உதவிகள் வாயிலாக மற்ற மாணவர்களும் மற்றும் தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களும் அதிக சிரத்தையுடன் படித்து இதுபோன்று அனைத்து பாடகளிலும் “ஏ” எடுக்க ஊக்கவிப்பாக அமைவதோடு, இது ஒரு தன்முனைப்பாக அமையும் என்று அவர் தெரிவித்தார்.

இங்குள்ள மேற்கு “சில்வர்லேக்” வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில், முத்தாய்ப்பு அங்கமாக தந்தையர் தினத்தை முன்னிட்டு வ.சிவகுமார் தலைமையில் அனிசல் வெட்டி அனைத்து தந்தையர்களும் பகீர்ந்துண்டு மகிழ்ந்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles