இந்திய தொழில் முனைவர்கள் தெக்கூன் மற்றும் இந்திய வர்த்தக சபையை தொடர்புக் கொண்டு மனு செய்யுங்கள்!

ஈப்போ, ஜுன். 17: “தெக்கூன் ” வாயிலாக இந்நாட்டில் சிறுவியாபாரிகள், தொழில்முனைவர்கள் ஆகியோருக்கு நிதியுதவியை தொழில்முனைவோர் கூட்டுறவுக் கழக அமைச்சு வழங்கி வருவதாக இவ்வமைச்சின் துணையமைச்சர் டத்தோ ஆர். ரமணனின், பிரத்தியேக தலைமை செயலாளர் டத்தோ அன்புமணி பாலன் பேராக் தொழில்முனவர்களை சந்தித்தபோது கூறினார்.

இந்த வணக்கம் மடானி கருத்தரங்கு நாடு முழுவதும் இந்திய வணிகர்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு தெக்கூன் மற்றும் மாநில இந்திய வர்த்தக சபை ஆதரவோடு நடத்தி வருவதாக அவர் சொன்னார்.

மக்களின் தேவைகள் அறிந்து தொழில்முனைவோருக்கு எஸ்.எம்.இ. ; அமானா இக்தியார் , தெக்கூன் மற்றும் இந்திய வர்த்தக சபை வாயிலாக உதவிகள் நல்கப்பட்டு வருவதை அவர் சுட்டிக்காட்டினார்.

இத்தகைய கருத்தரங்கில் கலந்துக்கொண்டு நிதியுதவி பெறுவதற்கு எவ்வாறு விண்ணப்பம் செய்வது மற்றும் உரிய ஆவணங்கள் இணைப்பது போன்ற ஆலோசனைகளை தெக்கூன் அதிகாரிகள் வாயிலாக பெற்றுக்கொள்ளும்படி அவர் அறிவுறுத்தினார்.

விண்ணப்பம் செய்யும் தொழில்முனைவோர் உண்மையான தகவல்களை அறிவிக்க வேண்டும். முறையான ஆவணங்களையும் அதிகாரிகளின் ஆலோசனையோடு இணைக் கும்படி அவர் கேட்டுக்கொண்டார்.

இவ்வாண்டில் மட்டுமே இதுவரை சுமார் 3000 இந்தியர்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த 2008 முதல் 2025 வரை சுமார் 513 மில்லியன் ரிங்கிட் வரை இந்த அமைச்சு அதாவது 30,337 மனுதார ர்களுக்கு உதவிகள் செய்யப்பட்டுள்ளதை தரவுகள் காட்டுவதாக அவர் உறுதியுடன் கூறினார்.

பேராக் இந்திய வர்த்தக சபை மற்றும் பேராக் தெக்கூன் ஏற்பாட்டில் இந்த வணக்கம் மடானி கருத்தரங்கு சிறப்பாக நடந்தேறியது. நேர்த்தியாக உண்மையான தகவல்களை மனுபாரத்தில் குறிப்பிட தவற வேண்டாம் என்று மனுதார ர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.இச்சந்திப்பில், ஈப்போ பாராட் பிகேஆர் தொகுதித்தலைவர் தினேஸ் மற்றும் சுங்கை சிப்புட் பிகேஆர் தொகுதித்தலைவர் கி.நோவிந்தன் கலந்துக்கொண்டனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles