
கோலாலம்பூர் ஜூன் 18
ம இகா தேசிய முன்னாள் தலைவர் மற்றும் முன்னாள் அமைச்சருமான டத்தோஸ்ரீ ஜி பழனிவேல் மறைவு இந்திய சமுதாயத்திற்கு பேரிழப்பு என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராயுடு தெரிவித்தார்.
மிகவும் அன்பாக பழகக் கூடியவர். அனைவரிடமும் நட்புக் கரம் நீட்டுவார்.
இவரின் மறைவு செய்தி பெரும் வேதனையை அளிக்கிறது.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்தனை செய்கிறேன் என்று பாப்பா ராயுடு தமது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

