டத்தோஸ்ரீ பழனிவேல் நல்லுடலுக்கு டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் உட்பட பிரமுகர்கள் இறுதி அஞ்சலி

கோலாலம்பூர்
ம இகா தேசிய முன்னாள் தலைவர் டத்தோஸ்ரீ ஜி. பழனிவேல் நல்லுடலுக்கு ம இகா தேசிய தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் உட்பட பல முக்கிய தலைவர்கள் இன்று இறுதி அஞ்சலி செலுத்தினர்.

டத்தோஶ்ரீ ஜி. பழனிவேல் உடல் நலக்குறைவால் நேற்று கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையில் காலமானார்.

76 வயதான டத்தோஶ்ரீ பழனிவேல் நல்லுடல் பங்சாரில் உள்ள அவரது இல்லத்தில் கிடத்தி வைக்கப்பட்டுள்ளது.

நாளை இறுதி சடங்கிற்கு பின்னர் செந்தூலில் தகனம் செய்யப்படுகிறது.

அவரின் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வரும் வேளையில் ம இகா தலைவர்கள் தொண்டர்கள் அரசியல் பிரமுகர்கள் இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

ம இகா தேசிய தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் மற்றும் துணை தலைவர் டத்தோஸ்ரீ எம் சரவணன் ஆகியோரும் இன்று இறுதி அஞ்சலி செலுத்தினர்.

கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதிராவ், மஇகா தேசிய உதவித் தலைவர் டத்தோ அசோஜன், டத்தோ டி. முருகையா, டத்தோ நெல்சன், பினாங்கு மாநில ம இகா தலைவர் டத்தோ தினகரன் , கெடா மாநில தலைவர் எஸ்.கே.சுரேஷ், பகாங் மாநில தலைவர் மாண்புமிகு ஆறுமுகம் , டான்ஸ்ரீ இக்பால், தேசிய நிலநிதி கூட்டுறவு கழகத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் டத்தோ சகாதேவன், டத்தோ டி. மோகன், கோத்தா ராஜா ம இகா துணைத் தலைவர் செளந்தரராஜன், விலாயா டத்தோ ராஜூ, பிபிபி கட்சியின் தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா, காப்பார் சேகரன், துணை பிரதமரின் சிறப்பு அதிகாரி அர்விந்த் அப்புசாமி, வழக்கறிஞர் செல்வம் சண்முகம் ஆகியோரும் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

பினாங்கு மாநில முன்னாள் துணை முதல்வர் மற்றும் உரிமை கட்சியின் தலைவர் பேராசிரியர் டாக்டர் பி இராமசாமியும் இறுதி அஞ்சலி செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles