லுமூட் ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்திற்கு( தண்ணீர் குளம்) நிலம் கிடைத்து விட்டது!

மஞ்சோங் , ஜுன். 20: இங்குள்ள லுமூட் முனீஸ்வரர் ஆலயம் (தண்ணீர் குளம்) நிலப்பிரச்சினை இறுதியில் தீர்க்கப்பட்டது. இவ்வாலயத்தின் நிலப்பிரச்சினை 2007 ம் ஆண்டில் தொடங்கி கடந்த 2024 ல் முற்றுப்பெற்றதாக அந்த ஆலயத்தின் செயலாளர் விஸ்வநாதன் கூறினார்.

இவ்வேளையில் பேராக் இந்திய சமூகநலத்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன் மற்றும் பேராக் நிலவள இலாகாவின் இயக்குநர் டத்தோ முகமட் பாரிஸ் ஹமிட்டிற்கும் அவர் ஆலய சார்பாக நன்றியை தெரிவித்துக்கொண்டார். அந்த இருவரின் முழுமையான ஆதரவால் இந்த ஆலயத்திற்கு 17 ஆண்டிற்கு பிறகு ஆலய நிலம் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்த ஆலய நிர்வாகம் நிலத்தை பெறுவதற்கு முதல் முறையாக 2007 ல் மனு செய்தனர். அம்மனு தோல்வியில் முடிந்தது. இருப்பினும், விடா முயற்சியுடன் 2008 முதல் 2018 வரை மனு தொடர்ந்து செய்யப்பட்டது. இவ்விவகாரம் தொடர்பாக அன்றைய மஞ்சோங் மாவட்ட ஆட்சியாளர் டத்தோ முகமட் பாரிஸ் ஹமிட் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டது என்று அவர் குறிப்பிட்டார்.

மாவட்ட ஆட்சியாளரின் ஆலோசனையின் அடிப்படையில், ஆலய நிலத்தை அளந்து அதன் அறிக்கையை வெளியிட்டது. இப்பணிகளை நிலத்தை அளக்கும் உரிமம் கொண்டுள்ள ஈப்போ ரவீந்திரன் பலராமன் சிறப்பாக செயல்பட்டார் என்று அவருக்கு நன்றியை அவர் தெரிவித்தார்.

இறுதியாக கடந்த 2022 ம் ஆண்டில் பேராக் மாநில ஆட்சிக்குழு கூட்டத்தில், இந்த முனீஸ்வரர் ஆலய நில விவகாரம் குறித்து பேசப்பட்டது. இறுதியில் பல போராட்டங்களுக்கு பின் இந்நிலம் 28.8.2024 ல் , 8377.7 சதுர அடி நிலப்பரப்பு ஆலயத்திற்கு வழங்கப்படுவதாக அதிகாரப்பூர்வ கடிதம் கிடைக்கப்பெற்றதாக ஆலய செயலாளர் விஸ்வநாதன் மகிழ்ச்சியுடன் கூறினார்.

இந்த ஆலயத்திற்கு கிடைக்கப்பெற்ற நிலம் வனப்பகுதிக்கு சொந்தமானதாகும். ஆலயத்தை ஒட்டியே இருந்த வனப்பகுதி நிலம் இந்த ஆலயத்திற்கு வழங்கப் பட்டது உண்மையாகும். இதற்கு மாற்று இடமாக பாகான் டத்தோ வட்டாரத்தில் ஒரு சில நிலப்பகுதியை வனத்துறைக்கு பேராக் மாநில அரசு வழங்கியுள்ளது. இதற்கு மாநில அரசுக்கு அவர் நன்றியை தெரிவித்துக்கொண்டார்.

இந்த ஆலய நிலப்பிரச்சினை தீர்வுக்கு காரணம் விடா முயற்சி வெற்றியளிக்கும் என்பதாகும். அத்துடன், நமக்கு உதவியவர்களை நன்றி உணர்வோடு என்றென்றும் நினைவுகூர்வது அவசியம் என்று அவர் தம் கருத்தை பதிவு செய்தார். தற்போது சுற்றுலா பயணிகளையும் பக்தர்களை கவரும் பொருட்டு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles