மக்களின் கண்ணீர் அஞ்சலியோடு விடை பெற்றார் டான்ஸ்ரீ டாக்டர் எம் தம்பிராஜா!

மா.பவளச்செல்வம்

கோலாலம்பூர் ஜூன் 25-
இந்திய சமுதாயம் கல்வியில் முன்னேற வேண்டும் என்பதற்காக கடந்த 43 ஆண்டுகளாக ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தை வெற்றிகரமாக வழி நடத்தி வந்தார் டான்ஸ்ரீ டாக்டர் எம் தம்பிராஜா.

ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் தோற்றுநரான டான்ஸ்ரீ டாக்டர் தம்பிராஜா நேற்று காலமான செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

83 வயதாகும் அவரின் மறைவு நாட்டிற்கும் கல்வி துறைக்கும் மிகப் பெரிய இழப்பாக கருதப்படுகிறது.

இந்நிலையில் டான்ஸ்ரீ தம்பிராஜாவின் நல்லுடல் பெட்டாலிங்ஜெயா ஸ்ரீ முருகன் கல்வி நிலைய ஆசிரமத்தில் வைக்கப்பட்டு பின்னர் செத்தியா ஆலாம் நிர்வாணாவில் அடக்கம் செய்யப்பட்டது.

முன்னதாக காலை முதல் அரசியல் தலைவர்கள், பிரமுகர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், மக்கள் என பலரும் இறுதி மரியாதை செலுத்தினர்.

இறுதி சடங்கிற்கு பின்னர் மக்களின் கண்ணீர் அஞ்சலியோடு டான்ஸ்ரீ டாக்டர் எம் தம்பிராஜா விடை பெற்றார்.

ஒரு நல்ல மனிதரை நாடும் இந்திய சமுதாயமும் இழந்து விட்டது என்று கண்ணீர் அஞ்சலி செலுத்தியவர்கள் வேதனையோடு தெரிவித்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles