ஈப்போ ஏ.சி.எஸ். பள்ளி மாணவி சர்மிலி தினகரன் உயரிய 4.0 புள்ளிகள் பெற்று பெருமை சேர்த்தார்.

ஈப்போ, ஜுன்.24: எஸ்.தி.பி.எம் தேர்வு முடிகள் நேற்று வெளியாகின. அவற்றில் அனைத்து நான்கு பாடங்களிலும் ‘ஏ’ பெற்று இத்தேர்வின் உயரிய புள்ளியான 4.0 பெற்று தம் பெற்றோர்களுக்கும், பள்ளிக்கும் பெருமை சேர்த்தார் சர்மிலி தினகரன்.

இவர் ஈப்போ ஏ சி எஸ் பள்ளியின் மாணவியாவார். இவர் நான்கு பாடங்களான மலாய் மொழி, சரித்திரம், வணிகவியல் மற்றும் பொது ஆய்வியல் ஆகிய அனைத்து பாடங்களிலும் ‘ஏ ‘ பெற்றார்.

பல ஆண்டுகளாக இப்பள்ளியில் இந்திய மாணவர்கள் உயரிய 4.0 புள்ளிகள் பெறுவதில் தவறி வந்தனர். ஆனால், இவ்வாண்டில் உயரிய 4.0 புள்ளிகளை பெற்று இந்திய சமூகத்திற்கு சர்மிலி தினகரன் பெருமை சேர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாணடில் 5 ஏசிஎஸ் ஈப்போ மாணவர்கள் உயரிய 4.0 புள்ளிகள் பெற்றார்கள். அவர்களில் 4 சீன மாணவர்கள் மற்றும் ஒரு இந்திய மாணவியாக சர்மிலி தினகரன் திகழ்கிறார்.

இவரின் எதிர்கால ஆசை சட்டத்துறையில் படித்து வழக்கறிஞராக திகழ வேண்டும் என்பதாகும். தம் மகளின் அடைவுநிலையை கண்டு பெருமை படுவதாக அவரது தந்தை தினகரன் மகிழ்ச்சியுடன் கூறினார். அவரது இரு மகன்கள் ஏற்கனவே பட்டதாரிகளாக உருவாகி விட்டனர். அடுத்து என் மகள் பட்டதாரியாக காண வேண்டும் என்ற ஆசையும் நிறைவு பெறுவதை எண்ணி மட்டற்ற மகிழ்ச்சியாக உள்ளது என்று கண்ணீர் மல்க அவர் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles