ஜசெக மத்திய செயற்குழு உறுப்பினராக சிவகுமார் – பாப்பா ராயுடு- துளசி நியமனம்!

ஈப்போ, ஜூன்.25: நேற்று முன்தினம் நடைபெற்ற ஜசெக வின் மத்திய கூட்டத்தில் 10 பேர் மத்திய செயலவை உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டனர். அவர்களில் மூவர் இந்திய பிரதிநிதியாவார்கள்.

அம்மூவரில் பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் வ.சிவகுமார், புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் ம.துள்சி் மற்றும் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் பாப்பாராயுடு ஆகியோர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் வாயிலாக இந்திய பிரதிநிதிகள் ஜசெக வின் மத்திய செயலவை உறுப்பினர்களாக மேலும் மூவர் கூடியுள்ளனர். இவர்களின் வாயிலாக மேலும் அதிகமான சேவைகளை இந்திய சமூகத்திற்கு இந்நாட்டில் செய்ய வழிவகை செய்கிறது எனலாம்.

இம்மூவரின் நியமனத்திற்கு மலேசிய ஜசெக இந்திய உறுப்பினர்களும், இந்திய சமூகத்தினரும் ஜசெக வின் தலைமைத்துவத்திற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கின்றனர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles