
புத்ரா ஜெயா, ஜூன் 26-
அரசாங்க சேவைகளுக்கான நாட்டின் ஒற்றை இலக்க நுழைவாயிலாகச் செயல்படும் (MyGOV Malaysia) திறன்பேசி செயலி ஜூலை 2025 இல் தொடங்கப்படும் என டிஜிட்டல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.
மலேசியா நாட்டின் அரசு தொழில்நுட்பம் (GovTech) என்பது இலக்கவியல் அமைச்சின் ஒரு பகுதியாகும்.
இதன் வழி மலேசியர்கள் பல்வேறு அரசாங்க நிறுவனங்களை எளிதாக அணுக உதவும்.
இது மலேசியாவை ஓர் இலக்கவியல் நாடாக மாற்றுவதற்கான அரசாங்கத் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
மலேசியர்கள் பல்வேறு அரசாங்க நிறுவனங்களுடன் இலகுவாக செயல்பட ஓரிட தலத்தை உருவாக்கியிருப்பது சிறப்பாகும்.
MyGOV Malaysia– திறன்பேசி அரசு தொழில்நுட்ப செயலி மலேசியா திறன்பேசி செயலி ஏழு முக்கிய சேவைகளில் கவனம் செலுத்தும் – பயணம் (கடவுச்சீட்டு தொடர்பான விஷயங்கள்); பதிவு (பிறப்பு மற்றும் குடியுரிமை); ஓட்டுநர் (சாலை வரி மற்றும் ஓட்டுநர் உரிமம்); சுகாதாரம் (மருத்துவச் சந்திப்புகள் மருத்துவ பதிவுகள்); அழைப்பாணைகள்; வீட்டுவசதி (நில வரி/மதிப்பீட்டு விகிதங்கள்); ரஹ்மா ரொக்க உதவி ஆகியவையாகும்.
அதோடு எதிர்காலத்தில் மேலும் பல அம்சங்களும் இணைத்துக் கொள்ளப்படும்.
அரசாங்க சேவைகளை ஒரே இடத்தில், பாதுகாப்பான தளத்தின் வழி அணுகுவதை, மேலும் சீரமைக்க மை.டிஜிட்டல் ஐ.டி (MyDigital ID) உடன் ஒருங்கிணைக்கப்படும் என்று கோபிந்த் கூறினார்.

