ஊழல் – மோசடி குற்றச்சாட்டில் இருந்து மூவார் எம்.பி. சைட் சாடிக் விடுதலை!

புத்ரா ஜெயா, ஜூன் 25-
ஊழல் மற்றும் பணமோசடி ஆகிய 4 குற்றச்சாட்டுகளிலிருந்து மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சைட் சாடிக் இன்று விடுதலை செய்யப்பட்டார்.

புத்ரா ஜெயா மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று அவரை ஏகமனதாக விடுதலை செய்து உத்தரவு பிறப்பித்தது.

டத்தோ அகமட் சைடி இப்ராஹிம்
தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட நீதிபதிகள் குழு அவருக்கு விடுதலையை வழங்கியது.

இளைஞர் விளையாட்டுத் துறை முன்னாள் அமைச்சருமான சைட் சாடேக்கின் மேல்முறையீட்டு விண்ணப்பத்தை ஏற்று மேல் முறையீட்டு நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.

அவர் குற்றம் செய்தவர் என்பதை அரசு தரப்பு நிரூபிக்க தவறி விட்டது.

மேலும் சைட் சாடிக் குற்றவாளி என்பதைச் நிரூபிக்க தேவையான சட்டப்பூர்வ கூறுகளையும், ஆதாரங்களையும் கீழ்நிலை நீதிமன்றம் சரியாக மதிப்பீடு செய்யவில்லை என்றும் நீதிபதிகள் குழு தெரிவித்தது.

அவருக்கு வழங்கப்பட்ட ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை, RM10 மில்லியன் அபராதம், இரண்டு பிரம்படி ஆகிய அனைத்துத் தண்டைகளையும் மேல்முறையீட்டு நீதிமன்றம் ரத்து செய்கிறது.

கடந்த 2021-ஆம் ஆன்டு ஜூலை 22ஆம் தேதி, பெர்சத்து கட்சியின் இளைஞர் பிரிவு தலைவராக இருந்த போது அக்கட்சியின் உதவி பொருளாளர் ரஃபீக் ஹக்கீம் ரஸாலியுடன் இணைந்து கட்சிக்குச் சொந்தமான பத்து லட்சம் வெள்ளியை மோசடி செய்ததாக அவருக்கு எதிராக மீது குற்றச் சாட்டுகள் கொண்டு வரப்பட்டது

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles