
சர்வதேச விண்வெளி நிலையம் செல்லும் சுபான்ஷு சுக்லாவுக்கு குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இஸ்ரோ, நாசா மற்றும் ஆக்சியம் ஸ்பேஸ் நிறுவனங்களின் கூட்டு முயற்சியாக , சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு மனிதர்களை அனுப்பும் ஆக்சியம்-4 திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த விண்வெளி பயணத்தில், இந்திய விண்வெளி வீரர் சுக்லாவுடன், அமெரிக்கா , ஹங்கேரி, போலாந்தை சேர்ந்த வீரர்கள் பங்கேற்றுள்ளனர். 41 ஆண்டுகளுக்குப் பிறகு விண்வெளி செல்லும் இந்தியர் என்ற சாதனையை சுபான்ஷு சுக்லா படைக்க உள்ளார். இந்த நிலையில், சுபான்ஷு சுக்லாவுக்கு குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி திரவுபதி முர்மு : சுபான்ஷு சுக்லாவின் சர்வதேச விண்வெளி பயணம் இந்தியாவுக்கு ஒரு மைல் கல். சுபான்ஷு சுக்லா உள்ளிட்டோரின் ஆய்வு விண்வெளி ஆராய்ச்சிக்கு உதவும்.

