பல்கலைக்கழக மாணவியை கொலை செய்யப்பட்ட விவகாரம்! குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துங்கள்!

சைபர் ஜெயா, ஜூன் 26-
தங்கும் விடுதியில் பல்கலைக்கழக மாணவி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உடல் இயக்க சிகிச்சைத் துறையில் (Physiotherapy) இளங்கலைப் பட்டப் படிப்பை மேற்கொண்டு வந்த அம்மாணவி, உடல் முழுக்க ரத்த காயங்களுடன் இறந்து கிடந்துள்ளார். இவரின் மரணத்தை காவல் துறை ஒரு கொலை என்று வகை படுத்தி உள்ளது.

இந்த மாணவியை கொடூரமான முறையில் கொலை செய்தவர்களை காவல் துறையினர் விரைந்து கைது செய்து நீதியின் முன் நிறுத்தி தக்க தண்டனை தர வேண்டும் என்று சிலாங்கூர் மாநில பிபிபி கட்சியின் தலைவர் டாக்டர் சுரேந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.
இந்த மாணவி கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் தங்கும் விடுதி பாதுகாப்பு நிலை குறித்து கேள்வி எழுந்துள்ளது

இந்த மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகள் யாரும் தப்பி விடக்கூடாது. இவர்களுக்கு சரியான தண்டனை கிடைக்க வேண்டும்.

மலேசிய காவல் துறையின் மீது மலேசியர்கள் எப்போதும் மதிப்பும் மரியாதையும் வைத்துள்ளனர். அந்த வகையில் கொலை செய்யப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்க காவல் துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

அதேசமயம் மாணவி தங்கி இருந்த விடுதியில் மற்றவர்கள் எப்படி நுழைய முடியும்.

காவல் பணியில் இருந்தவர்கள் தங்களது கடமையை முறையாக செய்தார்களா என்பதும் குறித்தும் காவல் துறையினர் முழு விசாரணை நடத்த வேண்டும். இந்த மாணவிக்கு ஏற்பட்ட கொடூரம் மற்ற மாணவிக்கும் ஏற்படக்கூடாது என்று அவர் கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles