எஸ்டிபிஎம் தேர்வில் முழு தேர்ச்சி பெற்று சாதனை படைத்தார் தேவேசர் மணிகண்டன்!

கோலாலம்பூர் ஜூன் 30-
அண்மையில் வெளியான எஸ்டிபிஎம் தேர்வு முடிவில் பல மாணவர்கள் முழு தேர்ச்சி பெற்று சாதனை படைத்திருக்கிறான்.

அந்த வகையில்
Kolej Pra Universiti Taman Selayang Batu Caves, Selangor இல் படித்த மாணவர் தேவேசர் மணிகந்தன் 4A மதிப்பெண்களை எடுத்து முழு தேர்ச்சி பெற்றார்.

பத்துமலை தமிழ்ப் பள்ளியில் தனது ஆரம்பக் கல்வியை பயின்ற இவர் யூபிஎஸ் ஆர் தேர்வில் 7A-!B பெற்றார்.

பின்னர் எஸ்பிஎம் தேர்வில் 11ஏ பெற்று சாதனை படைத்தார்.

இப்போது எஸ்டிபிஎம் தேர்விலும் சிறப்பான முறையில் தேர்ச்சி பெற்று குடும்பத்திற்கும் சமுதாயத்திற்கும் பெருமையை தேடி தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அறிவியல் தொழில்நுட்ப துறையில் மேற்கல்வியை பயல காத்துக் கொண்டிருக்கும் இவர் தமது வெற்றிக்கு பக்க பலமாக இருந்த பெற்றோர் மணிகண்டன் – மகேஸ்வரி, உடன் பிறப்புகள் மற்றும் உறவினர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles