
கோலாலம்பூர் ஜூன் 30-
செந்தூல் தண்டாயுதபாணி கோவில் மண்டபத்தில் மிகப்பெரிய அளவில் நடைபெற்ற கண்ணதாசன் விழாவில் மக்கள் கூட்டம் பெரும் அளவில் நிரம்பி வழிந்தது.
இந்த கண்ணதாசன் விழாவில் முன்னாள் போலிஸ் உயர் அதிகாரி டத்தோஸ்ரீ தெய்வீகன் உட்பட 5 பேர் சிறந்த சேவையாளருக்கான விருதுகள் பெற்றனர்.
கண்ணதாசன் அறவாரியத்தின் ஏற்பாட்டிலான கண்ணதாசன் விழா ஒவ்வொரு ஆண்டும் மிகவும் விமரிசையாக நடைபெற்று வருகிறது
தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும், மஇகா தேசியத் துணைத் தலைவரும், கண்ணதாசன் அரவாரியத்தின் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் எம். சரவணன் இந்த விழாவிற்குத் தலைமை தாங்கி தலைமை தாங்கினார்.
இந்த விழாவில் முக்கிய அங்கமாக 5 பேருக்கு விருது வழங்கப்பட்டது.
முன்னாள் போலிஸ் அதிகாரி டத்தோஸ்ரீ தெய்வீகன் தமிழ்க்காவலர் முருகு சுப்பிரமணியம் விருது வழங்கப்பட்டது.
ஓவியர் லேனாவுக்கு சாதனை தலைவர் துன் சாமிவேலு விருது வழங்கப்பட்டது.
மலேசிய வானொலியில் சிறப்பாக பணியாற்றிய எல். இராமனுக்கு மக்கள் தலைவர் டான்ஸ்ரீ சுப்பிரமணியம் விருதும் கமல சரஸ்வதிக்கு தமிழவேள் கோ. சாரங்கபாணி விருது வழங்கப்பட்டது.
விஜயவாகினி இசைக் குழு தலைவர் டாக்டர் இராஜுக்கு இறையருட் கவிஞர் சீனி நைனா முகமது விருதும் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
டத்தோஸ்ரீ சரவணனுக்கு ஐவருக்கும் விருதுகள் வழங்கி சிறப்பு செய்தார்.
மேலும் கண்ணதாசன் விழாவில் இதுவரை 246 பேருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.

