
பொதுத் தேர்தலுக்குப் பின்னர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் பிரதமராக வருவதற்கு ஆதரித்தற்காக என்னை உட்பட பத்து எம்பிக்களை துரோகிகள் என்று அழைக்கிறார்கள்
என்னை ஏன் துரோகி என்று அழைக்கிறார்கள் கூட தெரியவில்லை என்று செம்போரோங் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ இஷாமுடின் இன்று தெரிவித்தார்.
இறுதியாக கட்சியின் முடிவை பின்பற்றி ஆதரவை வாபஸ் பெற்றுக் கொண்டோம்.
இப்போது எங்களை துரோகிகள் என்று அழைக்கின்றனர்.
எங்கள் மீது அவர்கள் நடவடிக்கை எடுக்க விரும்பினால் எடுத்து கொள்ளட்டும். நான் கவலைப்படவில்லை என்றார்
மாட்சிமை தங்கிய மாமன்னர் உத்தரவிடும் போது ஒற்றுமை அரசாங்கம் அமைய ஒப்புக் கொண்டோம்.
அப்படியானால் துரோகம் எங்கிருந்து வந்தது என்று அவர் கேள்வியை எழுப்பினார்.

