மீபா இளையோர் கால்பந்து போட்டியில் தம்பூன் பிளேக் பெந்தர்ஸ் சாம்பியன்!

சுங்கை பூலோ, ஏப் 27-
மீபா எனப்படும் மலேசிய இந்தியர் கால்பந்து சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற 17 வயதுக்கு உட்பட்ட இளையோர் கால்பந்து போட்டியில் பேராக் தம்பூனை சேர்ந்த Black Panter Fc வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

சுங்கை பூலோ ஆர்ஆர்ஐ திடலில் நடைபெற்ற மீபா 17 வயது, 15 வயது மற்றும் இளம் மகளிர் கால்பந்து போட்டியில் 1,400 க்கும் மேற்பட்ட விளையாட்டாளர்கள் கலந்து கொண்டனர்.

இதில் 17 வயதுக்கு உட்பட்ட இளையோர் பிரிவில் பேராக் தம்பூன் Black Panter கிளப் வெற்றி பெற்றது.

ஜொகூர் கேபிஎஸ் இந்தியன் குளுவாங் கிளப் 2 ஆவது இடத்தைப் பிடித்தது.

கிளப் ரெமாஜா ஷா ஆலம் மற்றும் கேபி ஈப்போ பிரைடே கிளப் 3,4 ஆவது இடங்களை பிடித்தது.

இந்த போட்டியில் சிறந்த விளையாட்டாளர், சிறந்த கோல் கீப்பர் மற்றும் அதிக கோல்களை அடித்தவர் என்று மூன்று விருதுகளை பிளேக் பந்தர்ஸ் கிளப் தட்டிச் சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மலேசிய இந்தியர் கால்பந்து சங்கத்தின் தலைவர் அன்பானந்தன், துணை தலைவர் ஏஎஸ்பி இராஜன், உதவித் தலைவர் ஸ்ரீ சங்கர், டத்தோ சந்தோங் சிங், முன்னாள் தேசிய வீரர் நந்தா ஆகியோர் வெற்றி பெற்ற குழுக்களுக்கு பரிசுகளை எடுத்து வழங்கினர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles