மீபா 15 வயதுக்கு உட்பட்ட போட்டியில் எம்.கே.யுனைடெட் சாம்பியன்!

சுங்கை பூலோ ஏப் 27-
மலேசிய இந்தியர் கால்பந்து சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற மீபா 15 வயதுக்கு உட்பட்ட கால்பந்து போட்டியில் எம்.கே யுனைடெட் எப்சி வெற்றி பெற்றது.

மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இறுதி ஆட்டத்தில் எம்.கே.யுனைடெட் எப்சி 1-0 என்ற கோல் கணக்கில் பேராக் சித்தியவான் ரேஞ்சர்ஸ் கிளப்பை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.

இந்த போட்டியில் ஷா ஆலம் ரெமாஜா 3 ஆவது இடத்தையும் செர்டாங் யுனைடெட் 4 ஆவது இடத்தையும் பிடித்தது.

மீபா தலைவர் அன்பானந்தன், துணை தலைவர் ஏஎஸ்பி இராஜன், உதவித் தலைவர் ஸ்ரீ சங்கர், டத்தோ சந்தோங் சிங் ஆகியோர் வெற்றி பெற்ற குழுக்களுக்கு பரிசுகளை எடுத்து வழங்கினர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles