காமாட்சி சின்னப்பொன்னு குடும்ப ஒன்றுகூடல்! நான்கு தலைமுறையினர் ஒன்று சேர்ந்த அற்புத விழா

ஏதோ ஒரு சின்ன விதையில்தான் விருட்சமாகிறது ஓர் ஆலமரம்.

நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்றாவதும்
அது விழுதிட்டு விருட்சமாவதும் ஒரு குடும்பத்தின் அடையாளமாய் ஒளிர்கிறது வரலாற்று படிமமாய்.

பாசமெனும் நூலில் கோர்க்கப்படும் இந்த உறவுமலர்கள் பூமாலையாகி மணப்பதெல்லாம் குடும்பத்தை ஆலமரமாய்த் தாங்கி நிற்கும் குடும்பத்தின் தாய்க்கிழவியால்தான்…

அப்போதெல்லாம் சொந்தங்களின் கல்யாணம், காதுகுத்து என எல்லா விசேஷங்களுக்கும் குடும்பத்தோடு கலந்து கொள்ளும் பண்பாடு மறக்க முடியாத அனுபவமாகும்.

போகும்போது இருக்கும் குதூகலமும் திரும்பும்போது ஏற்படும் பிரிவின் ஏக்கமும் இன்று நினைக்கையிலும் கண்களைக் கசியச்செய்கிறது…

காலப்போக்கில் அனைவரும் பிழைப்புக்கென்று திசைக்கொருவராய்ப் பிரிந்து, சந்திப்புகள் அருகிப்போய்,உறவுகளிலிருந்த நெருக்கம் மறந்து போனது.ஒன்றாய் ஒரே குடும்பத்தில் பிறந்தவர்களே சந்தித்துக்கொள்ள இயலாத சூழலில்,ஒன்றுவிட்ட சொந்தங்களை என்ன சொல்வது…?

அப்படி விலகி நிற்கும் குடும்ப உறவுகளை இணைக்கும் விதமாகப் பெரும் முயற்சியெடுத்து அண்மையில் ,காப்பாரில் தாய்வழி பந்தங்கள் தெய்வத்திரு காமாட்சி சின்னப்பொன்னு தம்பதியர் ஈன்றெடுத்த வாரிசுகளும் நான்காவது தலைமுறை வரை உள்ள அவர்களின் சொந்தங்களையும் ஒன்று சேர்த்து குடும்ப விழாவை நடத்தினார்கள்.

தெய்வத்திரு காமாட்சி சின்னப்பொன்னு தம்பதியினரின் இரண்டாவது மகள் திருமதி வரியக்கா , நான்காவது மகள் திருமதி லட்சுமி, அத்தை திருமதி அஞ்சலை மற்றும் தாயார் திருமதி பூசனம் இவர்கள் அனைவருக்கும் பொண்டாடையும் அனிவித்து சிறப்பு செய்யப்பட்டது.

இவர்களுடன் 30 குடும்பத்தை சேர்ந்த ஏறக்குரைய 100 கொண்ட உறவினர்கள் கலந்து கொண்டனர்.

இவ்விழாவின் சிறப்பான தருணமாக வருகை புரிந்த அனைவருக்கும் கலஞ்சென்ற தெய்வத்திரு காமாட்சி சின்னபொன்னு தாய்தந்தையரை அவர்களது உருவத்தில் ஒரு டாலர் அணிவிக்கப்பட்டது.
டாக்டர் மகேந்திரன் சுப்பையா இந்த விழாவை மிகவும் விமரிசையாக நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles