கோலாலம்பூர் கேஎல்சிசி மாநாட்டு மண்டபத்தில் அனைத்துலக நகரத்தார் வாணிப தொழில் மாநாடு!

வரும் பிப்ரவரி 11 ஆம் தேதி கோலாலம்பூர் கேஎல்சிசி மாநாட்டு மண்டபத்தில் மாபெரும் அளவில் அனைத்துலக நகரத்தார் வாணிப தொழில் மாநாடு நடைபெறுகிறது.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சிறப்பு வருகை புரிந்து இந்த மாநாட்டை அதிகாரப் பூர்வமாக தொடக்கி வைக்கலாம் என்று எதிர்பார்கப்படுவதாக மாநாட்டு ஏற்பாட்டுக் குழு தலைவர் டத்தோ ஆர் இராமநாதன் தெரிவித்தார்.

தமிழ் நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், தமிழ் நாடு சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி மற்றும் தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் உட்பட 15 நாடுகளைச் சேர்ந்த பேராளர்கள், தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

அனைத்துலக அளவில் வர்த்தக தொழில் வாய்ப்புகளை பறிமாறிக் கொள்ளும் வகையில் இந்த மாநாடு அமைந்துள்ளது.

மேலும் மலேசியாவில் புதிய முதலீடுகளை ஊக்குவிக்கும் வண்ணம் இந்த மாநாடு முதுக்கெலும்பாக விளக்கும் வேளையில் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான அரசாங்கம் நாட்டை சிறந்த முறையில் பொருளாதார வளர்ச்சிக்கு கொண்டு செல்ல இது உதவும் என்று டத்தோ இராமநாதன் தெரிவித்தார்.

மனித வள அமைச்சர் வி சிவகுமார், கூட்டுறவு மேம்பாட்டு துறை துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி உட்பட பல முக்கிய பிரமுகர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்கிறார்கள்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles