காமன்வெல்த் அறக்கட்டளையின் தலைவராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ள சுதா தேவிக்கு பிரதமர் அன்வார் வாழ்த்து

காமன்வெல்த் அறக்கட்டளையின் இரண்டாவது முறையாகத் தலைவராக டத்தோ சுதா தேவி கே.ஆர்.வாசுதேவன், ஜனவரி 1ஆம் தேதி முதல் மீண்டும் நியமிக்கப்பட்டதற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டுள்ளார்.

இன்று தமது முகநூல் பதிவில், சுதா தேவியின் மறு நியமனம் காமன்வெல்த்தின் அனைத்து 56 உறுப்பு நாடுகளிலிருந்தும் ஒருமித்த ஆதரவைப் பெற்றதாக அவர் சொன்னார்.

“அவர் ஒரு மலேசியர் மற்றும் காமன்வெல்த் அறக்கட்டளை 1966 இல் நிறுவப்பட்டதிலிருந்து அதன் தலைவராக இருக்கும் முதல் ஆசியர் ஆவார்.

வாழ்த்துகள், டத்தோ சுதா தேவி! என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பாராட்டியுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles