இல்லங்கள் தோறும் மகிழ்ச்சி பொங்கட்டும்! மனித வள அமைச்சர் வி சிவகுமாரின் பொங்கல் வாழ்த்து செய்தி

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். அந்த வகையில் உலகில் உள்ள தமிழ் பெருமக்கள் பொங்கல் திருநாளை மிகவும் விமர்சையாக கொண்டாடி வருகிறார்கள்.

இந்த இனிய பொங்கல் திருநாளில் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன்.

இல்லங்கள் தோறும் மகிழ்ச்சி பொங்கட்டும். இந்திய சமுதாயம் கல்வி – பொருளாதாரத்தில் சிறந்த விளங்க இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்.

மலேசியா திருநாட்டில் இந்திய சமுதாயம் சீரும் சிறப்புடன் வாழ மனதார தைப்பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் பெருமை கொள்கிறேன் என்று மனித வள அமைச்சர் வி சிவகுமார் தமது தைப்பொங்கல் வாழத்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் பி இராமசாமி, ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம் குலசேகரன், கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வி.கணபதிராவ், சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஆர். ரமணன், சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் எஸ் கேசவன், பகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் சதீஷ் முனியாண்டி, உலு லங்காட் கெஅடிலான் தொகுதி தலைவர் டாக்டர் சத்யா பிரகாஷ் நடராஜன், தினத்தந்தி சிட்டிசன் இணையத்தளம் உரிமையாளர் டத்தோ சுரேஸ்குமார், உலு சிலாங்கூர் கவுன்சிலர் ப. புவனேஸ்வரன் , மக்கள் சக்தி கட்சி தலைவர் டத்தோஸ்ரீ ஆர்எஸ் தனேந்திரன் , தொழிலதிபர் டத்தோ டாக்டர் இராமசாமி சண்முகம் ஆகியோரும் தைப்பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles