
வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி கொண்டாடப்படும் தமிழ்க் கடவுள் முருகப் பெருமானின் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு
வியாபாரம் செய்வதற்கு 236 இடங்களை செலாயாங் நகராண்மைக்
கழகம் ஒதுக்கியுள்ளது.
இந்த கடைகளுக்கான குலுக்கல் பத்து கேவ்ஸ்,
தாமான் ஸ்ரீ கோம்பாக், டேவான் பெரிங்கினில் ஜனவரி 19ஆம் தேதி
நடைபெறும்.
காலை 9.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை குலுக்கல்
நடைபெறும் என்று செலாயாங் நகராண்மைக் கழகத்தின் வர்த்தக மற்றும்
பொது உறவுத் துறை அறிக்கை ஒன்றில் கூறியுள்ளது.
உணவு, குளிர்பானங்கள், உலர்ந்த பொருள்கள், முடிதிருத்தும் கடைகள்
மற்றும் வாகனங்கள் மூலம் வியாபாரம் செய்வதற்கான இடங்களுக்கு
குலுக்கல் நடைபெறுவதாக அது தெரிவித்தது.
மாற்றுத் திறனாளிகள் சங்கத்திற்கு 15 வர்த்தக இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள
வேளையில் 221 இடங்கள் இதர வணிகர்களுக்கு வழங்கப்படும்..
இதில்
பொது மக்கள் அதிகம் கூடும் 85 ஹாட்ஸ்போட் இடங்களும் அடங்கும்.
உலர்ந்த பொருள்கள், உணவு மற்றும் பானங்களை விற்பதற்கு 110
இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான கட்டணம் 200 வெள்ளியாகும்.
16
முடிதிருத்தும் கடைகளுக்குத் தலா 250 வெள்ளி கட்டணம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

