தாய்க் கோயில் என்றழைக்கப்படும் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் ஆனி திருமஞ்சன உபயம் மிகவும் விமரிசையாக நடைபெற்றது!

கோலாலம்பூர், ஜூலை 2-
தாய்க் கோயில் என்றழைக்கப்படும் கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் ஆனி திருமஞ்சன உபயம் மிகவும் விமரிசையாக நடைபெற்றது.

ஆனி மாதம் உத்திர நட்சத்திரத்தன்று நடக்கும் தரிசனமே ஆனி உத்திர தரிசனமாகும்.

ஆனித் திருமஞ்சனத்தை `மகா அபிஷேகம்’ என்றும் அழைப்பர். ஆனி மாதம் சஷ்டி திதியும், உத்திர நட்சத்திரமும் இணைந்த நாள் மிகவும் சிறப்பு வாய்ந்தது.

இந்த நாளில் நடராஜர் மற்றும் சிவகாமியின் திருவுருவங்களுக்கு விசேஷ அபிஷேகங்கள் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்யப்படும்.

இந்த நாளில் நடராஜரை தரிசனம் செய்தால் துன்பங்கள் நீங்கி, வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும் என்பது ஐதிகம்

இந்த நாளில் நடராஜர் மற்றும் சிவகாமி அம்மனுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்படுகிறது.

இந்த நாளில் நடராஜரை தரிசனம் செய்வதன் மூலம் துன்பங்கள் நீங்கும், வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.

அந்த வகையில் கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் JKR (பொதுப்பணித்துறை துறை இலாகா) மற்றும் KKR சார்பில் நடைபெற்ற 62 ஆம் ஆண்டு ஆனி திருமஞ்சன உபயத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து சிறப்பித்தனர்.

அபிஷேகம், சிறப்பு பூஜையை தொடர்ந்து நடனங்களும் இடம் பெற்றது.

பின்னர் சாமி ஊர்வலத்தை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானமும் பரிமாறப்பட்டது.

உபய நாட்டாமை ஆர். அன்பழகன், உபய பிரதிநிதிகள் கே.ரஜினிகாந்த் மற்றும் கே.சிவகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் ஆர் நடராஜா, புவான் ஸ்ரீ மல்லிகா தம்பதியர், அறங்காவலர் டத்தோ கண்ணா சிவகுமார், கதிரேசன், சந்திரசேகரன், செயலாளர் சேதுபதி, பொருளாளர் டத்தோ அழகன், வாரிய உறுப்பினர் டாக்டர் முனியப்பா உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

உபய நாட்டாமை ஆர். அன்பழகன் பொதுப் பணி துறை உபயத்தின் சார்பாக டான்ஸ்ரீ டாக்டர் ஆர் நடராஜா மற்றும் டத்தோ கண்ணா சிவகுமார் பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து சிறப்பு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles