
கோலகுபு பாரு, ஜூலை 5-
சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் வேலை வாய்ப்பு சந்தையில் அதிகமான இந்தியர்கள் பங்கேற்க வேண்டும் என்று உலு சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சத்யா பிரகாஷ் நடராஜன் கேட்டுக் கொண்டுள்ளார்.
இன்று கோலகுபு பாரு மெர்டேக்கா மண்டபத்தில் மிகப்பெரிய அளவில் நடைபெற்ற வேலை வாய்ப்பு சந்தையில் அதிகமான மக்கள் கலந்து கொண்டனர்.
இருப்பினும் இந்தியர்களின் வருகை குறைந்த அளவில் காணப்பட்டது.
வேலை தேடும் இந்தியர்கள் இதுபோன்ற வேலை வாய்ப்பு சந்தையில் பங்கேற்று தங்கள் விருப்பும் அல்லது பொருத்தமான வேலைகளை தேர்வு செய்து கொள்ளலாம்.
வேலை கிடைக்கவில்லை என்று கூறுவதை விட இதுபோன்ற நிகழ்வில் பங்கேற்றால் எதாவது ஒரு வேலை கிடைத்து விடும்.
ஏராளமான நிறுவனங்கள் இப்போது வேலை வாய்ப்புகளை உருவாக்கி தந்துள்ளது.
இதை இந்திய சமுதாயம் நல்ல முறையில் பயன் படுத்தி கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராயுடு சிறப்பு வருகை தந்து இந்த வேலை வாய்ப்பு சந்தையை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.
சிலாங்கூர் மாநில பிபிபி கட்சியின் தலைவர் டாக்டர் சுரேந்திரன் உட்பட பலரும் இதில் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

