சிம்மோர் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் பாலர் பள்ளி நிர்மாணிக்க அங்கிகாரம்! டத்தோ சுரேஷ்குமார் தகவல்

பேரா , சிம்மோர் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் பாலர் வகுப்பை நிர்மாணிக்க அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக தம்புன் நாடாளுமன்ற தொகுதிற்கான சிறப்பு அதிகாரி டத்தோ ஆர் . சுரேஷ்குமார் தெரிவித்தார்

தம்புன் நாடாளுமன்றத் தொகுதிற்கு உட்பட்டுள்ள இப்பள்ளியின் வளர்ச்சிக்கு பல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இப்பள்ளியில் பாலர் பள்ளியை அங்கிகரிக்க கல்வி இலாகாவின் ஒப்புதலை பெற்றுள்ளதாக சிம்மோர் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் 38 ஆண்டு ஆண்டு போட்டி விளையாட்டை தொடக்கி வைத்தப் பின்னர் இந்த தகவலை டத்தோ சுரேஷ்குமார் நிருபர்களிடம் கூறினார்

இந்த பலர் பள்ளியை நிர்மாணிக்க 3 லட்சம் ரிங்கிட்டை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் அங்கிகரித்துள்ளார். இந்த பாலர் பள்ளி இந்த ஆண்டு இறுதிக்குள் நிர்மாணிக்கப்படும் என்ற தகவலைத் தெரிவித்தார்

இப்பள்ளியில பாலர்பள்ளியை நிர்மாணிப்பதின் வழி் எதிர்காலத்தில் மேலும் அதிமான மாணவர்கள் பயில வாய்ப்பு உள்ளதாக பள்ளியின் அந்த வகையில் இப்பள்ளி் நிர்வாகம் இப்பள்ளியில் பாலர் பள்ளி வகுப்பு இல்லாத நிலையை போக்க தம்மிடம் முன் வைத்தது.

அதன் பயனாக மேற்கொள்ளப்பட்ட நடவடிகை பயனால் சிம்மோர் தோட்டத் தமிழ்ப் பள்ளியில் பாலர் பள்ளியை அமைக்க அங்கிகாரத்தைப் பெற்றுள்ளதாக டத்தோ சுரேஷ்குமார் தெரிவித்தார்.

இப்பள்ளியில் பாலர் பள்ளியை நிர்மாணிக்க அனுமதி பெற்றதற்கு பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் க. டினேஷ்குமார், டத்தோ சுரேஷ குமாருக்கு நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.

இந்த நிகழ்வில் வர்த்தக பிரமுகர் எஸ். வாசு உட்பட சுற்றுவட்டாரத்தில் உள்ள தமிழ்ப்பள்ளிகளின் தலைமையாசிரியர் பலரும் கலந்துக்கொண்டனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles