
கோலாலம்பூர், ஜூலை 9 – சைபர்ஜெயாவில் பல்கலைக்கழக மாணவி கொலை வழக்கில் சந்தேக நபர் மீது விரைவில் குற்றவியல் சட்டப் பிரிவு 302 இன் கீழ் கொலைக் குற்றம் சாட்டப்படும் என்று சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் டத்தோ ஹுசைன் உமர் கான் தெரிவித்தார்.
இன்று காலை 8.30 மணிக்கு சிப்பாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு கொண்டுவரப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இருப்பினும், வழக்கு தீர்மானிக்கப்படாத தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சிப்பாங் காவல்துறைத் தலைவர் நோர்ஹிசாம் பஹாமன் உறுதிப்படுத்தியதாக செய்தி வெளியானது.
அம்மாணவியின் உடல் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஜூன் 26 முதல் ஜூன் 27 வரை ஜோகூர் பாரு மற்றும் நெகிரி செம்பிலானில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
மூன்று சந்தேக நபர்களும் பாதிக்கப்பட்டவருக்குத் தெரிந்தவர்கள் என்றும், அவரது வீட்டிற்குள் வலுக்கட்டாயமாக நுழைந்ததற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என காவல்துறையினர் தெரிவித்தனர்.
பிரேதப் பரிசோதனையில் அம்மாணவி தலையில் ஏற்பட்ட காயத்தால் இறந்துள்ளார் மற்றும் பாலியல் வன்கொடுமைக்கான எந்த ஆதாரமும் இல்லை என்று கண்டறியப்பட்டது