கெஅடிலானில் எந்த பிளவும் இல்லை; இந்தியர்களின் தேவைகளை பிரதமர் பூர்த்தி செய்வார்: டத்தோஸ்ரீ ரமணன்

13ஆவது மலேசியத் திட்டத்தில் இந்தியர்களின் தேவைகளை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் நிச்சயம் பூர்த்தி செய்வார் என தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் கூறினார்.

13ஆவது மலேசியத் திட்டம் குறித்த பிரச்சினையும் தற்போது நாட்டில் எழுந்துள்ளது. நாட்டில் வாழும் அனைத்து இன மக்களின் நலனை பாதுகாக்க வேண்டும் என்பது பிரதமரின் முதன்மை இலக்காகும்.

அதன் அடிப்படையில் 13ஆவது மலேசியத் திட்டத்தில் நிச்சயம் அவர் இந்தியர்களின் தேவைகளை பூர்த்தி செய்வார் என டத்தோஸ்ரீ ரமணன் இதனை கூறினார்

கெஅடிலான் கட்சித் தேர்தல் அண்மையில் நடைபெற்று முடிந்தது. இந்த தேர்தலுக்குப்பின் கெஅடிலான் கட்சியில் பல்வேறு பிரச்சினைகள் நிறைவு பெறுகிறது.

குறிப்பாக அக்கட்சியில் பல பிளவுகள் ஏற்பட்டுள்ளது என பரவலாக பேசப்பட்டு வருகிறது. உண்மையில் இது போன்ற வதந்தி தகவல்களை யார் பரப்புகின்றனர் என்று எனக்கு தெரியவில்லை.

கெஅடிலான் கட்சியில் எந்த பிரச்சினையும் இல்லை. அக்கட்சி இன்னும் வலுவாக தான் உள்ளது. அதே வேளையில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் தலைமையிலான மடானி அரசாங்கமும் நிலையாக தான் உள்ளது.

ஆகவே பொய்யான தகவல்களை பரப்புவதை சம்பந்தப்பட்ட தரப்பினர் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles