வட கிந்தா மாவட்ட அளவிலான வளர் தமிழ் விழா 2025 விமரிசையாக நடைபெற்றது!

கிந்தா, ஜூலை 10-
வட கிந்தா மாவட்ட அளவிலான 25 ஆம் ஆண்டு வளர் தமிழ் விழா ஈப்போ அரசினர் தமிழ்ப்பள்ளியில் சிறப்புடன் நடைபெற்றது.

வடகிந்தா மாவட்ட தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் கழக ஏற்பாட்டில் நடைபெற்ற இப்போட்டியில் மகிழம்பூ தமிழ்ப்பள்ளி வாகை சூடியது.

இரண்டாவதாக செட்டியார் தமிழ்ப்பள்ளி மற்றும் மூன்றாவது நிலையில் சென். பிலோமினா தமிழ்ப்பள்ளி வாகை சூடியது என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று நடைபெற்ற இப்போட்டியை வர்த்தக பிரமுகர் ஆறுமுகம் கணேசன் தொடக்கி வைத்து நிகழ்வு சிறப்புடன் நடைபெற 3 ஆயிரம் ரிங்கிட் நிதி உதவியை வழங்கினார்.

இப்போட்டியில் திருக்குறள் மனனப்போட்டி , , கவிதை ஒப்புவித்தல் மற்றும் பேச்சுப்போட்டி ஆகியவைகள் இடம் பெற்றது .

இதில் வட கிந்தா மாவட்டத்தில் உள்ள 14 தமிழ்ப்பள்ளிகளில் இருந்து 390 மாணவர்கள் பங்கேற்றனர் என்று பேரா மாநில தலைமையாசிரியர் கழகத் தலைவரும் கிந்தா மாவட்ட தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர் கழகத் தலைவருமான ச. ஜெயகுமார் கூறினார்.

மாநில அளவிளான வளர்தமிழ் விழா இம்மாதம் 26 ஆம் தேதி பத்துகாஜாவில் உள்ள செங்காட் தமிழ்ப்பள்ளியில் நடைபெற உள்ள தகவலையும் தெரிவித்தார்

வரும் ஆகஸ்ட் மாதம் மலாக்காவில் தேசிய நிலையில் நடைபெறவிருக்கும் போட்டியில் பேரா மாநிலத்தை பிரதிநிதித்து போட்டியில் கலந்துக் கொள்வார்கள் என்றார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles