மாணவி மணிஷாப்ரி கொலை வழக்கு! ஸ்ரீடர்வியன் – தினேஸ்வரி மீது குற்றச்சாட்டு

சிப்பாங், ஜூலை 10-
பல்கலைக்கழக மாணவி மணிஷாப்ரி கொலை தொடர்பாக இன்று சிப்பாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வயதான எம். ஸ்ரீ டர்வியன் மற்றும் தினேஸ்வரி மீது குற்றம் சாட்டப்பட்டடது.

குற்றவியல் சட்டம் 302 இன் கீழ் 19 வயதான எம். ஸ்ரீ டர்வியன் மீது முதலில் குற்றம் சாட்டப்பட்டது.

மேலும் 19 வயதான மாணவி டி. தினேஸ்வரி என்பவர் ஸ்ரீ டர்வியனை கொலை செய்யத் தூண்டியதாக குற்றவியல் சட்டம் 109 இன் கீழ், பிரிவு 302 இன் கீழ் குற்றம் சாட்டப்பட்டது.

மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இருவர் மீதும் தனித்தனியாக குற்றம் சாட்டப்பட்டது.

கடந்த ஜூன் 23ஆம் தேதி இரவு 9.11 மணி முதல் இரவு 11.31 மணி வரை சைபர்ஜெயாவில் உள்ள பெர்சியாரன் மல்டிமீடியாவின் முதியாரா வில்லா சைபர்ஜெயா பிளாக் ஏவில் ஸ்ரீ டர்வியன் இந்தக் குற்றத்தைச் செய்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் தினேஸ்வரி அதே நாளில், அதே இடத்தில் மதியம் 12.30 மணிக்கு குற்றத்தைத் தூண்டும் குற்றத்தைச் செய்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இருவருக்கும் ஜாமீன் வழங்கப்படவில்லை.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles