சனிக்கிழமை சுங்கை பூலோ ஆர்ஆர்ஐ திடலில் சிலாங்கூர் – விலாயா மாநில தமிழ்ப் பள்ளிகள் இடையிலான கால்பந்து போட்டி!

கோலாலம்பூர் ஜூலை 10-
வரும் ஜூலை 12 ஆம் தேதி சனிக்கிழமை சுங்கை பூலோ ஆர்ஆர்ஐ திடலில் சிலாங்கூர் – விலாயா மாநில தமிழ்ப்பள்ளிகள் இடையிலான 21 ஆம் ஆண்டு கால்பந்து போட்டி மிகப்பெரிய அளவில் நடைபெறுகிறது.

சிலாங்கூர் – விலாயா மாநில தமிழ்ப்பள்ளி தலைமை ஆசிரியர் மன்றம் மற்றும் சிலாங்கூர் காற்பந்து சங்கத்தின் ஆதரவில் இந்த போட்டி நடத்தப்படுகிறது என்று பெட்டாலிங் மாவட்ட கால்பந்து சங்கத்தின் தலைவர் பத்துமலை தெரிவித்தார்.

சனிக்கிழமை நடக்கும் போட்டியில் மாணவர்கள் பிரிவில் 68 குழுக்களும் மாணவிகள் பிரிவில் 32 குழுக்களும் பங்கேற்கிறது.

ஆக மொத்தம் இம்முறை 100 குழுக்கள் பங்கேற்பது மிகப்பெரிய மகிழ்ச்சியை அளிக்கிறது என்று அவர் சொன்னார்.

ஆண்கள் பிரிவில் வெற்றி பெறும் குழுவுக்கு நமச்சிவாயம் கிண்ணமும் ஆயிரம் வெள்ளி ரொக்கமும் வழங்கப்படும்.

இரண்டாம் இடத்தைப் பிடிக்கும் குழுவுக்கு 500 வெள்ளியும் 3,4ஆவது இடங்களைப் பிடிக்கும் குழுக்களுக்கு தலா 250 வெள்ளியும் வழங்கப்படும்.

பெண்கள் பிரிவில் வெற்றி பெறும் குழுவுக்கு ரவீந்திரன் கிண்ண மும் ஆயிரம் வெள்ளியும் வழங்கப்படும்.

இரண்டாம் இடத்தைப் பிடிக்கும் குழுவுக்கு 500 வெள்ளியும் 3,4 ஆவது இடங்களைப் பிடிக்கும் குழுக்களுக்கு தலா 250 வெள்ளி வழங்கப்படும்.

இந்த போட்டி வெற்றி பெறுவதற்கு சிலாங்கூர் மாநில கால்பந்து சங்கத்தின் உதவித் தலைவர் டத்தோ சுகுமாறன், மஇகா இளைஞர் விளையாட்டு பிரிவு தலைவர் ஆண்ட்ரூ டேவிட், சிலாங்கூர் மாநில ம இகா விளையாட்டு பிரிவு தலைவர் டத்தோ பதி, சிலாங்கூர் மாநில கால்பந்து சங்கத்தின் ஆட்சிக் குழு உறுப்பினர் சேகர் சந்திரன், சிலாங்கூர் இந்தியர் கால்பந்து சங்கத்தின் தலைவர் பச்சையப்பன் ஆகியோருக்கு பத்துமலை நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

இந்த போட்டிக்கு மைலோ நிறுவனம் முழு ஆதரவு வழங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பெட்டாலிங் மாவட்ட கால்பந்து சங்கத்தின் துணைத் தலைவர் குணா, கென்னத் கண்ணா, செயலாளர் குணசேகரன், போட்டி ஏற்பாட்டுக் குழு இயக்குனர் ராமச்சந்திரன் உட்பட பலரும் போட்டியை சிறப்பாக நடத்தி முடிக்க தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles