


மஞ்சோங், ஜூலை 13-
பேரா, மஞ்சோங் மாவட்டத்தில் கம்போங் டத்தோஸ்ரீ கமாருடின் எனும் இடத்தில் வெ. 30 லட்சம் செலவில் அருள் மிகு
ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலய மகா கும்பாபிஷேக விழா மிகவும் சிறப்புடன் நடைபெற்றது.
இவ்விழாவைக்கான பெரும் திரளான பக்தர்கள் திரண்டனர்.
இந்த வட்டாரத்தில் பெரும் பிரசித்திப்பெற்ற இந்த ஆலய திருப்பணி் மற்றும் கும்பாபிஷேக விழா சிறப்புடன் நடைபெற அரசாங்கம் பொது மக்கள் பேராதவு வழங்கியதாக அதன் ஆலய. கட்டடக் குழுத் தலைவர் சத்தியசிவம் ராசையா கூறினார்.
இந்த ஆலயம முன்பு சப்போக் தோட்டத்தில் இருந்தது. அத் தோட்டம் துண்டாடல் நடைபெற்றபோது 1990 இல் இந்த ஆலயம் இந்த கிராமத்தில்இடம் மாற்றம் கண்டதாக அவர் குறிப்பிட்டார்.
ஆலயத்தின் திருப்பணி கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கி இன்று ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
இவ்விழாவைக்கான பெரும் திரளான பக்தர்கள் திரண்டனர். இந்த ஆலயம் திருப்பணிக்கு பேராதரவு வழங்கிய அனைவருக்கும் .ஆலயத் தலைவர் சங்கர் கனகராஜா கூறினார்.
இவ்விழாவிற்கு மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் அ. சிவநேசன் சிறப்பு வருகை புரிந்தார் இந்த ஆலயத்திற்கு மேலும் ரி. 40 ஆயிரம் நிதி உதவி வழங்குவதாக உறுதியளித்தார்.
இந்த ஆலயத்திற்கு இதற்கு முன்பு 10, 000 ஆயிரம் வெள்ளி வழங்கியதை நினைவுக் கூர்ந்தார்

