


மலாக்கா, ஜூலை 13-
அந்த காலத்தில் ரயில்வே நிலையத்தில் பாதை அமைக்க வந்த தொழிலாளர்களால் சிறு குடிசையாக அமைக்கப்பட்ட முருகன் கோவில் தற்போது120 ஆண்டுகள் கடந்து தேவஸ்தானத்தின் தலைவர் திரு மனோ அவர்களின் மேற்பார்வையில் ஆலய பொறுப்பாளர்களின் ஒத்துழைப்புடன் வெகு சிறப்பாக பக்தர்களுக்கு அருள்பாளிக்கும் Melaka,Batu Berendam. அருள்மிகு ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி தேவஸ்தானத்தின் மகா கும்பாபிஷேகம் இன்று 13 ஜூலை 2025 மிக சிறப்பாக நடைபெற்றது.
இந்த குடமுழக்கு நன்னீராட்டு விழாவில் 3,000 க்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து முருகனின் அருளாசி பெற்றார்கள்.
இவ்விழாவில் அடியேன் கவிமாறனும் கலந்து கொண்டேன்.
காலை 11 மணிக்கு மேல் அனைத்து பக்தர்களும் கந்த சஷ்டி கவசத்தை பாடிய பிறகு அபிஷேகம் அலங்காரம் ஆராதனை முடிந்து மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
தொடர்ந்து இன்று இரவு சிறப்பு பூஜையும் ரத ஊர்வலமும் நடைபெறும் அதை எடுத்து 48 நாட்களுக்கு தொடர்ச்சியாக மண்டல அபிஷேகம் நடைபெறும் சுற்று வட்டார பொதுமக்கள் தவறாது கலந்து கொண்டு சிறப்பு சேர்க்கும் படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
இதனிடையே இன்று நடைபெற்ற மகா கும்பாபிஷேகம் விழாவில் லோட்டஸ் குழுமத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் டான்ஸ்ரீ ரெனா துரைசிங்கம்,
ம இகா தேசிய முன்னாள் தலைவர் டான்ஸ்ரீ சுப்ரமணியம், டத்தோஸ்ரீ ஹரி, டாக்டர் சுவாமி சண்முகநாதன் மற்றும் மலாக்கா மாநில சட்டமன்ற உறுப்பினர் சட்டமன்ற உறுப்பினர் சண்முகம் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

