

கோலாலம்பூர் ஜூலை 16-
லேபோ அம்பாங்கில் பாரம்பரியமிக்க பூங்கா ராயா உணவகத்தை பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் இன்று அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார்.
தலைநகரில் குறிப்பாக லேபோ அம்பாங்கில் பல ஆண்டுகளாக இயங்கி வரும் பூங்கா ராயா உணவகம் இப்போது புதுப்பிக்கப்பட்டுள்ளது.

அழகான மேஜை நாற்காலிகள், குளிர்சாதன வசதியுடன் பூங்கா ராயா உணவகம் விளங்குகிறது.

சுவை மாறாத வாழை இலையில் இன்னமும் உணவு பரிமாறப்படுகிறது. சுவைமிக்க சைவம் மற்றும் அவைசம் உணவுகள் அனைத்தும் இங்கு பரிமாறப்படுகிறது.
காலையில் அருமையான தோசை, இட்லி, வடை, மதியம் பல்வேறு சுவைமிக்க உணவுகள் அனைத்தும் வாடிக்கையாளர்களுக்கு பரிமாறுகிறோம் என்று பூங்கா ராயா உணவக உரிமையாளர்கள் பாலா மற்றும் பாரதி ஆகியோர் தெரிவித்தனர்.
இதனிடையே பூங்கா ராயா உணவகத்தில் இதற்கு முன் சாப்பிட்டேன். இன்றும் உணவு உட்கொண்ட போது அதே சுவை இருந்தது என்று மாண்புமிகு பிரபாகரன் தெரிவித்தார்.
காரம் நிறைந்த உணவு வகைகளை சாப்பிட விரும்புவோர் பூங்கா ராயா உணவகத்தை நாடலாம் என்று அவர் சொன்னார்.

