
சுங்கைபட்டாணி ஜுலை 17-
நாடறிந்த கலைஞர் எம்.ஜே.தேவா தாயாரிப்பில் 19.7.2025 சனிக்கிழமை காலை மணி 11.00 முதல் மாலை மணி 7,00 வரை தெறிக்க விடலாம எனும் மாபெரும் நடனப்போட்டி சுங்கைபட்டாணி விலேஜ் மோல் அரங்கில் நடைபெற உள்ளது.

மூன்றாம் ஆண்டாக நடைபெறும் இந்த நடனப்போட்டியில் அரையிறுதி மற்றும் இறுதிச் சுற்றில் 20 திறமைமிக்க போட்டியாளர்கள் பங்கேற்க உள்ளனர்.
சமூக சேவையாளரும் தொழிலதிபருமான டாக்டர் சிங்கப்பூர் சின்னையா நாயுடு மற்றும் டாக்டர் சோபினா நாயுடு தலைமையில் இந்த நிகழ்வு அரங்கேறவுள்ளது.
தமிழ் நாட்டின் நடனக் கலைஞரும் நடிகருமான ரோபோ சங்கர் மற்றும் நடன இயக்குனர் MJ மணி நடுவராக இருந்து வெற்றியாளர்களை அடையாளம் காண்பர்.
மஇகா கெடா மாநிலத் தலைவர் எஸ்.கே.சுரேஸ்,டாக்டர் மதியழகன் சிறப்பு விருந்தினராக இதில் கலந்துக் கொள்வர்.
சுற்றுவட்டார மக்கள் நடன ஆர்வாளர்கள் இதில் திரளாகக் கலந்துக் கொள்ளுமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளரும் தயாரிப்பாலருமான எம்.ஜே.தேவா கேட்டுக் கொண்டுளார்.

